காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசியிருக்கிறார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்காமல் புறக்கணித்தது.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேடுபாட்டால் கலந்து கொள்ள வில்லை என்று டிஆ பாலு வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.

அவரின் இந்த கருத்து டெல்லியை அசைத்து பார்த்து இருக்கிறது.  

இந்நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அழைப்பின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லி சென்றார்.

சோனியாவை சந்தித்த அவர் திமுக, உள்ளாட்சி தேர்தல், அவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது திமுகவில் தந்த நெருக்கடி குறித்து அழகிரிக்கு சோனியா செம டோஸ் விடுத்ததாக தெரிகிறது.

திமுக, காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சோனியாவுயுடன் அழகிரி பேசியிருப்பது முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே