கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கிருஷ்ணகிரி, தி.மு.க., – எம்.எல்.ஏ., செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதியானது.

கிருஷ்ணகிரி தொகுதி, தி.மு.க., – எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் செங்குட்டுவன், 63;

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளராகவும் உள்ளார்.

காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் ஓசூரிலுள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, கொரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுத்து அனுப்பப்பட்டது.

அதில், அவருக்கு கொரோனா உள்ளது உறுதியானது.

எம்.எல்.ஏ., செங்குட்டுவனுக்கு ஏற்கனவே, இருதய ஆப்ரேஷன் செய்யப்பட்டு உள்ளது.

இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே