CBSE +2 தேர்வு குறித்து 2 நாளில் முடிவெடுக்கப்படும் – மத்திய அரசு

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில் ஜூன் 3ஆம் தேதிக்குள் கொள்கை முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த 2 நாள்களுக்குள் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்க இருப்பதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறினார்.

வழக்கின் விசாரணை வருகிற ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்ததுடன், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு கொள்கை ரீதியான முடிவெடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே