ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து கொல்கத்தா..!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் இன்றைய (அக்.,18) போட்டியில் ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த கோல்கட்டா அணி, 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது.

ஐக்கிய அரபு எமீரேட்சில் (யுஏஇ) நடைபெற்று வரும் 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35வது போட்டி அபுதாபில் நடக்கின்றது.

இதில் இயான் மோர்கன் தலைமையிலான கோல்கட்டா அணியும், வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஐதராபாத் அணி 7 போட்டிகளிலும், கோல்கட்டா அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், ‘டாஸ்’ வென்று ‘பவுலிங்’ தேர்வு செய்தார். 

அதன்படி, கோல்கட்டா அணியின் திரிபாதி, சுப்மன் கில் ஓரளவு நல்ல துவக்கம் தந்தனர். திரிபாதி (23), கில் (36), ராணா (29) ஆகியோர் தங்களது பங்களிப்பை அளித்து அவுட்டாகினர்.

அடுத்து வந்த ரசல் (9) வேகமாக வெளியேறினார். பின்னர், கேப்டன் இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் ஓரளவு அதிரடிக்காட்டினர்.

கடைசி பந்தில் மோர்கன் (34) அவுட்டாக, 20 ஓவர் முடிவில் கோல்கட்டா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. கார்த்திக் 29 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே