நியூசிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசிந்தா ஆர்டனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!!

பொது தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்காக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அந்த நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் சிறப்பாகச் செயால்பட்டதன் காரணமாக சர்வதேச நாடுகளால் பாராட்டப்பட்டார்.

இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாக ஜெசிந்தா மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.

பின்னர் மக்களிடையே உரையாற்றிய ஜெசிந்தா, “நியூசிலாந்து மக்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழிலாளர் கட்சிக்கு தங்களது மிகப்பெரிய ஆதரவை அளித்துள்ளனர்.

வாக்குகளை அடிப்படையாக கொண்டு அல்லாமல், அனைத்து நியூசிலாந்து மக்களுக்குமான ஆட்சியை எங்களது கட்சி வழங்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்று அவர் கூறினார்.

ட்விட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், “மகத்தான வெற்றி பெற்றதற்காக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

ஓராண்டுக்கு முன் நடந்த நமது சந்திப்பை நினைத்து பார்க்கிறேன். இந்தியா-நியூசிலாந்து இடையேயான உறவை, மேலும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்.” என குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே