சென்னையை வீழ்த்தி 3வது முறையாக கொல்கத்தா சாம்பியன்!

கலக்கலாக ஆடிய கோல்கட்டா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., தொடரின் ஆறாவது சீசன் நடந்தது.

கோவாவின் படோர்டா மைதானத்தில் நடந்த பைனலில் தலா இரு முறை கோப்பை வென்ற அணிகளான சென்னை, கோல்கட்டா பலப்பரீட்சை நடத்தின.

4வது நிமிடத்தில் சென்னை வீரர் வால்ஸ்கிஸ் கோல் அடிக்க கிடைத்த எளிதான வாய்ப்பை கோட்டை விட்டார்.

இவர் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டுத் திரும்பியது. 11வது நிமிடம் கோல்கட்டா வீரர் ராய் கிருஷ்ணா கொடுத்த பந்தை பெற்ற ஜாவி ஹெர்னாண்டஸ், இடது காலால் அடித்து கோலாக மாற்றினார்.

27, 28வது நிமிடங்களில் வால்ஸ்கிஸ் எடுத்த கோல் முயற்சிகள் வீணாகின. 

30வது நிமிடம் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் ஸ்கீம்ரி தலையால் அடித்த பந்தை கோல் கீப்பர் தடுத்தார்.

சென்னை அணியின் அடுத்தடுத்த முயற்சிகள் வீணாக, முதல் பாதியில் 0-1 என பின்தங்கியது.

இரண்டாவது துவங்கிய 3வது நிமிடம் கோல்கட்டா வீரர் கார்சியா ஒரு கோல் அடிக்க, கோல்கட்டா 2-0 என முந்தியது.

69 வது நிமிடம் ஜெர்ரி கொடுத்த பந்தை வாங்கிய வால்ஸ்கிஸ், கோல் அடித்து நம்பிக்கை தந்தார்.

கடைசி நிமிடத்தில் கோல்கட்டாவின் ஜாவி (90+3வது) மற்றொரு கோல் அடித்தார்.

முடிவில் கோல்கட்டா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

2014, 2016க்குப் பின் மூன்றாவது முறையாக (2020) கோல்கட்டா கோப்பை வென்றது.

ரசிகர்களுக்கு ‘நோ’கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் அனைத்து போட்டித் தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டன.

ஐ.எஸ்.எல்., தொடரின் பைனல் மட்டும் நேற்று நடந்தது.

மத்திய சுகாதாரத்துறை ‘அட்வைஸ்’ படி, ரசிகர்கள் யாரும் போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை.

பைனல் துவக்கத்தின் போது இரு அணி வீரர்களும் அறிமுகம் செய்து கொண்டனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்காமல், இரு கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர்.

‘கோல்டன் பூட்’ஐ.எஸ்.எல்., தொடரின் ஆறாவது சீசனில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் சென்னை அணியின் வால்ஸ்கிஸ் (15 கோல்), கோல்கட்டாவின் ராய் கிருஷ்ணா (15), கேரளாவின் ஒபெசே முதல் மூன்று இடம் பெற்றனர்.

இதையடுத்து சிறந்த வீரருக்கான ‘கோல்டன் பூட்’ (தங்க காலணி) விருதை வால்ஸ்கிஸ் தட்டிச்சென்றார்.

கோல்டன் கிளவ்ஐ.எஸ்.எல்., தொடரின் சிறந்த கோல் கீப்பருக்கான ‘கோல்டன் கிளவ்’ விருதை பெங்களூரு அணியின் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து வென்றார்.* வளரும் சிறந்த இளம் வீரராக சுமித் (இந்தியா) தட்டிச் சென்றார்.*

‘ஹீரோ ஆப் தி லீக்’ (தங்க பந்து) விருது கோவா வீரர் ஹியுகோவுக்கு கிடைத்தது. ரூ. 8 கோடி பரிசுசாம்பியன் கோப்பை வென்ற கோல்கட்டா அணிக்கு ரூ 8 கோடி பரிசு தரப்பட்டது. சென்னை அணிக்கு ரூ. 4 கோடி கிடைத்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே