மார்ச் 29 இல் திமுக பொதுக்குழுக்கூட்டம்

திமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான திமுக பொதுக்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

திராவிட இயக்கத் தலைவா்களில் முதுபெரும் தலைவரும், முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா்.

இந்த நிலையில், திமுகவின் அடுத்த பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் திமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கான தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் 29-03-2020 அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். 

அப்போது திமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே