டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்..!

மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டம் சூடு பிடித்துள்ளது. இன்று கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி அபுதாபியில் நடக்கிறது.

இன்று மும்பைக்கு எதிராக மேட்ச் நடக்கும் நிலையில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பதவி விலகி உள்ளார்.

இதனால் கொல்கத்தா கேப்டனாக இயான் மோர்கன் பதவி ஏற்றுள்ளார்.

முதல்முறையாக கொல்கத்தா அணியின் கேப்டனாக இயான் மோர்கன் அணியை வழி நடத்த உள்ளார். 

இதுவரை 7 போட்டிகளில் கொல்கத்தா விளையாடி உள்ளது.

அதில் 4 போட்டிகளில் கொல்கத்தா வென்று 3ல் தோல்வி அடைந்துள்ளது.

கொல்கத்தா அணிக்கு பிளே ஆப் செல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ள நிலையில் இன்று இயான் மோர்கன் அணியை வழி நடத்துகிறார்.

கொல்கத்தா அணியில் இன்று ராகுல் திரிபாதி, சுப்மான் கில், நிதிஷ் ராணா, இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் , ரசல், கிரிஸ் கிரீன், பாட் கும்மின்ஸ், சிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஆடுகிறார்கள்.

அணியில் பாண்டன், நாகர்கோட்டி நீக்கப்பட்டு மாவி, கிரிஸ் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் பட்டின்சன் நீக்கப்பட்டு நாதன் சேர்க்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா, டீ காக், சூர்யா குமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ராகுல் சாகர், டிரெண்ட் போல்ட் , நாதன் நைல், பும்ரா ஆகியோர் ஆடுகிறார்கள்.

மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சேஸிங் செய்வது அபுதாபியில் கடினம் என்பதால் பேட்டிங் தேர்வு செய்ததாக புதிய கேப்டன் இயான் மோர்கன் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே