ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடர்…. அணி அறிவிப்பு!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வரும் ஜூலை மாதம் 8ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தாங்கள் கலந்துகொள்ள போவதில்லை என மூன்று மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கு பெரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பெயர் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் ஜேசல் ஹோல்டர் தலைமையில் ஜெராமைன் பிளாக்வுட், கிருமா போனர், கிரெய்க் பிரத்வைட், ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்பெல், ராஸ்டன் சேஸ், ரஹீம் கார்ன்வால், ஷேன் டவுரிச், செமர் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஜரி ஜோசப், ரேமன் ரெய்ஃபர், கெமர் ரோச் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

இந்த தொடரை முன்னிட்டு மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டேரன் பிராவோ, சிம்ரான் ஹெட்மியர் மற்றும் கீமோ பால் உள்ளிட்ட 3 பேர் சுற்றுப்பயணத்திற்காக இங்கிலாந்து செல்ல மறுத்துள்ளனர். எனவே இவர்கள் தொடரில் கலந்து கொள்வதில் சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.

Related Tags :

WestIndies Vs England| Cricket

Sri Mahat

ENJOY EVERY MOMENT..

Sri Mahat has 140 posts and counting. See all posts by Sri Mahat

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே