இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. மத்திய அரசின் தகவல்களின்படி தற்போது வரை 206 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தேசிய பேரிடராக கொரோனா பாதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என்று பொது மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார்.

இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் பலியானார். 

இதனால் கொரோனாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே