சபரிமலை விவகார தீர்ப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து!

சபரிமலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை, 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கூடுதல் விளக்கங்கள் தேவைப்படுவதாகவும், இதற்காக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பில் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பதில் தடை ஏதும் இல்லை எனவும், அதே உத்தரவு தான் தற்போதும் அமலில் இருப்பதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

சபரிமலை விவகாரத்தைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அமல்படுத்த அரசு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே