பெண்கள் பலரை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை கைது

காசி செய்த தில்லாலங்கடி வேலைகள் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று தடயங்களை அழித்ததாக கூறி, காசியின் தந்தையை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

26 வயசு நாகர்கோவில் காசி என்பவர் பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள் எடுத்து.. லட்சக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.

இதைதவிர, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது..

குண்டர் சட்டத்திலும் இவர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளார்.

காசியின் நண்பர் 19 வயது ஜினோவை ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில், மற்றொர நண்பர் தினேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். 

தற்போது, காசி மீதான கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

மேலும் பைக்கை அபகரித்தது தொடர்பாக, தனியார் வங்கியில் இருந்தவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்தவர்கள் காசிக்கு உதவி செய்ததாக சொல்கிறார்கள்.

அதனால், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பணமோசடி செய்த வழக்கில் தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் கைதாகி உள்ளார்.

கைது செய்யப்பட்ட தங்க பாண்டியனிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 914 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே