பாதாம் பூரி செய்வது எப்படி?

பாதாம் பூரி ஒரு பழமையான பாரம்பரியமான தென்னிந்திய இனிப்பு வகை. இது மைதா மாவு, சிரோட்டி ரவை மற்றும் சர்க்கரை பாகு சேர்த்து செய்யப்படுகிறது. பண்டிகை காலத்தில் இந்த டிஷ் ரொம்பவே ஃபேமஸான ஒரு ரெசிபி. இந்த பாதாம் பூரி செய்வதற்கு எளிமையானது மற்றும் ருசிப்பதற்கு சவையானது. இந்த மொறுமொறுப்பான கரகரப்பான பூரிகள் சர்க்கரை பாகில் ஊறவைக்கும் போது ஒரு பர்ஃபெக்டான ஃப்ளேவரை தந்து அதன் சுவை உங்கள் நாவின் சுவை அரும்புகளில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும். அப்புறம் என்ன? இந்த ஸ்வீட்டை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு செய்து கொடுத்து அசத்திடலாம் தானே..!பா

முக்கிய பொருட்கள்
1 கப் மைதா மாவு
3 தேக்கரண்டி சேமோலினா அரிசி
பிரதான உணவு
3 தேக்கரண்டி துருவிய தேங்காய்
2 கப் சீனி
1 கப் நெய்
அழகூட்டுவதற்கு/ அலங்கரிப்பதற்கு
தேவையான அளவு உதிர்ந்த பாதாம்
How to make: பாதாம் பூரி செய்வது எப்படி?
Step 1:
ஒரு கிண்ணத்தில் மைதா, 2 ஸ்பூன் சிரோட்டி ரவை, பாதாம், 6 ஸ்பூன் நெய் ஆகியவற்றை சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்துக்கோங்க.
Step 2:
இந்த கலவையில் கொஞ்சம் பால் சேர்த்து பூரி மாவாக பிசைஞ்சிக்கோங்க.
Step 3:
ஒரு தனி பவுலில் இரண்டு கப் சர்க்கரை சேர்த்து அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து கொதிக்க விட்டு சர்க்கரை பாகை தயாரிச்சு வைச்சுக்கோங்க.
Step 4:
மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக்கிக் கொண்டு சப்பாத்தி கல்லில் சின்னச் சின்ன பூரிகளாக திரட்டிக்கோங்க. அதை முக்கோண வடிவத்தில் தேய்த்து எடுத்து வைங்க.
Step 5:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பாதாம் பூரிகளை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுங்க.
Step 6:
பொரித்த பூரிகளை ஏற்கனவே தயார் செஞ்சு வெச்ச ஃபிரஷ்ஷான சர்க்கரை பாகில் போடுங்க. இறுதியா, சர்க்கரை பாகிலிருந்து பூரிகளை எடுத்து தேங்காய் பொடியில் எல்லா பக்கங்களும் படும்படி புரட்டி தேங்காய் கோட்டிங் கொடுங்க.இந்த இனிப்பான பாதாம் பூரியை சூடாக இருக்கும் போதே மேலே சில பாதாம்களை தூவி அலங்கரிச்சு சுவைத்து மகிழுங்கள். இந்த ஸ்வீட்டை காலை, மாலை என்று எப்போ வேண்டுமானாலும் பரிமாறலாம்!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே