கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்களுக்கான சாம்பியன்ஷிப் கபாடி போட்டியில் சேலம் அணி முதலிடம் பெற்றது.
கரூரை அடுத்த புகலூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கரூர் மாவட்ட அமெச்சூர் கபாடி கழகமும், தமிழ்நாடு அமைச்சூர் கபாடி கழகமும் இணைந்து நடத்திய 67வது மாநில சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் 2020-க்கான போட்டிகள் கடந்த 17ஆம் தேதி துவங்கி 3 நாட்களாக நடைபெற்று வந்தது.
இப்போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.
முதலில் லீக் முறையிலான போட்டிகள் நடைபெற்ற இந்த போட்டிகள், பின்னர் நாக்அவுட் முறையில் நடைபெற்றது.
இன்று இரவு நடைபெற்ற இறுதிச் சுற்று போட்டியில் சேலம் அணியும் கடலூர் அணியும் மோதின.
முதலில் இருவரும் விறுவிறுப்பான ஆட்டத்தில் சம புள்ளிகளைப் பெற்றனர். பின்னர் தொடர்ந்து சேலம் அணியின் கை ஓங்கியது.
ஆட்டத்தின் இறுதியில் 39-க்கு 16- என்ற புள்ளிகள் கணக்கில் சேலம் அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு இப்போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக மின்சார மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணி மற்றும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கோப்பைகள், பரிசுப் பணம் மற்றும் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்