தேர்வெழுதும் மாணவர்களுக்காக பிரதமர் மோடி சிறப்புரை

தேர்வு பயத்தை போக்க மாணவர்களிடையே பிரதமர் மோடி உரையாடும் நிகழ்ச்சியை அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க டெல்லியில் Pariksha Pe Charcha என்ற தலைப்பில் நாளை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 50 மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

இந்த நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்ப தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பிரதமரின் உரையைப் பார்க்கவும், பிற மாணவர்களுக்கு அது தொடர்பான தகவல்களை வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் மாணவர்களின் கருத்துகளைப் பெற்று அதை அறிக்கையாக சமர்ப்பிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே