சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள ஆயிரத்து 97 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், 14-வது ஐ.பி.எல். சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது.

அதற்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் 814 இந்திய வீரர்களும், 283 வெளிநாட்டு வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த 56 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கிர்க்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளார்.

ஏலத்திற்கு அவருக்கான குறைந்தபட்ச விலை 20 லட்சம் என்று கூறப்படுகிறது.

அர்ஜூன் டெண்டுல்கரை பொறுத்தவரை மும்பை இண்டியன்ஸ் அணிக்காக நெட் பவுலராக சில வருடங்கள் இருந்துள்ள்ளார். கடந்த ஐபிஎல் தொடரின் போதும் ஐக்கிய அமீரத்திற்கு அவர் அணியுடன் சென்றிருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சையது முஷ்டாக் அலி டிராபில் விளையாடினார். ஆனால், பெரிய அளவில் அர்ஜூன் சோபிக்கவில்லை. ரன்களும் குவிக்கவில்லை.

பந்துவீச்சிலும் ரன்களை வாரி வழங்கினார்.

சீனியர் லெவலில் இரண்டு போட்டிகளில் மட்டுமே அர்ஜூன் விளையாடியுள்ளார். அவரை சாம்பியன் டீமான மும்பை இண்டியன்ஸ் ஏலத்தில் எடுக்குமா என்பது சந்தேகமே.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே