இந்தியில் பிரதமர் உரை – தமிழக மாணவர்கள் மொழி புரியாமல் தவிப்பு

பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியிலிருந்து கலந்துரையாடும் நேரடி காட்சிகள் நேரலையாக திருவள்ளூரில் உள்ள ஆர்.எம் ஜெயின் வித்யாலயா தனியார் பள்ளியில் ஒளிபரப்பப்பட்டது.

புதுடில்லியில் உள்ள தல்கொட்டோரா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ள பள்ளி மாணவ மாணவியர்கள் உளவியல் ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மாணவர்களிடையே விவாதத்தில் பங்கேற்றுள்ளார்.

நேரலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மாணவ மாணவியர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார்.

இக்காட்சியை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வித்யாலயா வித்யாஸ்ரமம் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் நேரலையாக பிரதமர் மோடி மாணவர்களுடன் பரிக்ஷா பி சர்ச்சா 2020 என்ற தலைப்பில் உரையாடுவதை காணொளியில் காண்கின்றனர்.

ParikshaPeCharcha2020

மாணவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடுவார் பிரதமர் என்ற எதிர்பார்ப்பில் பல்வேறு பிராந்திய மொழிகளில் படித்து வரும் மாணவ மாணவியர் அவருடன் அமர்ந்து அவரது பேச்சை கேட்டு வருகின்றனர்.

இதனிடையே திருவள்ளூர் ஆர் எம் ஜெயின் வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் பிரதமர் உரையாடுவதை பார்க்க பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக காணொளி அறையில் இந்தி மொழியில் பிரதமர் பேசியதால் பெரும்பாலான மாணவர்கள் ஒன்றும் புரியாமல் தவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே