விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர் கே சி கருப்பணன் தொண்டர்களுடன் நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து அமைச்சர் கே சி கருப்பணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவர் செம்மேடு ஊராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, தொண்டர்களுடன் நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.