பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி!

பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பாஜகபில் இணைந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் நீண்ட ஆண்டுகளாக நடித்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் ராதா ரவி.

இவர் சில நாட்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். 

இந்நிலையில் இன்று சென்னை வந்த பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை விமான நிலையத்தில் சந்தித்த நடிகர் ராதாரவி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே