கர்நாடகா : மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞரின் வாகனம் பறிமுதல்

பெங்களூரு – ஓசூர் சாலையிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில், மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் சென்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு – ஓசூர் சாலையிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில், நபர் ஒருவர், தன், 1,000 சிசி திறன் கொண்ட பைக்கில், மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் சென்ற வீடியோ, ‘புளுபீஸ்ட் 46’ என்ற ‘இன்ஸ்டிராகிராம்’ என்ற சமூக வலைதளத்தில் பரவியது.

இது குறித்து அறிந்த, குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல், சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று காலை, சந்தீப் பாட்டீல், தனது டுவிட்டரில் குறிப்பிட்டதாவது :பெங்களூரு – ஓசூர் சாலையிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில், மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் பைக்கில் சென்ற நபரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதிவேகமாக சென்று தன் உயிரை மட்டுமின்றி, மற்றவர்களின் உயிருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக அவரை கைது செய்த போலீசார் அவரின் பைக்கை போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே