கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 36.
தமிழ்த் திரையுலகில் ஓரிரு படங்களில் நடித்தவர் சேதுராமன். இவர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு எம்டி படித்துள்ளார்.
தோல் சிகிச்சை நிபுணர். பல்வேறு மருத்துவம் சார்ந்த விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.
தோல், முடி பிரச்சினைகளுக்கு ஏராளமான தீர்வுகளை யூடியூப் மூலம் வெளியிட்டுள்ளார். இயற்கை சார்ந்த உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்துவார்.
இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் தோல் நோய்களுக்கு லேசர் முறையில் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை கற்றுக் கொண்டுள்ளார்.
இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். காமெடி நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் 3 கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார்.
பின்னர் வாலிபராஜா என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராவார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு காரைக்குடியைச் சேர்ந்த பொறியாளர் உமையாளை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவர் நள்ளிரவு 12 மணி அளவில் மாரடைப்பால் காலமானார்.
இவரது வீடு சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் அருகே உள்ள அபார்மென்ட்டில் உள்ளது.
Pingback: Kanna laddu thinna aasaiya star dr sethuraman dies of cardiac arrest | Antru Kanda Mugam