காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டுள்ளார்.

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படவுள்ளது.

இதனையடுத்து, இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில்,வருகிற 22-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். 23-ந் தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். 25-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்று கொள்ளலாம்.

மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால்,தேர்தல் பணிகளில் குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில்,காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு வார்டு – ஒன்றியக் குழு வார்டுகளில் வார்டு உறுப்பினராக போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ளார்.அதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே