பொதுத்தேர்தல் / இடைத்தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா காலத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* மாஸ்க், உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்

* சமூக இடைவெளியை கடைபிடிக்க பெரிய அளவிலான அறைகளில் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்.

* அத்தியாவசிய பணிகளில் உள்ள பணியாளர்களுக்கு தபால் மூலம் ஓட்டுப்போடலாம்

* 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், தபால் மூலம் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டுள்ளது.

* ஓட்டு சேகரிப்பு, பிரசாரத்தின் போது சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம்.

*வீடுவீடாக சென்று பிரசாரம் செய்யும் போது வேட்பாளர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே இருக்க வேண்டும்

* தேர்தல் தொடர்பான பணியின் போது ஒவ்வொருவரும் மாஸ்க் அணிந்திருப்பது கட்டாயம்

*தேர்தல் பணிகள் நடக்கும் இடங்களில் வெப்ப பரிசோதனை கருவிகள் வைத்திருக்க வேண்டும்.

*கிருமி நாசினி, சோப்பு, சானிடைசர், போன்ற பொருட்களும் அவசியம்

* ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளில் 1000 பேர் மட்டுமே ஓட்டுப்போடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* மின்னணு ஓட்டு இயந்திரங்களை தூய்மைபடுத்திய பிறகு பயன்படுத்த வேண்டும்.

*ஓட்டு எண்ணிக்கை அறையில் அதிகபட்சம் 7 மேசைகள் மட்டும் அமைக்க வேண்டும்

* வாகன அணிவகுப்புகளில் அதிகபட்சம் 5 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்

* தேர்தல் பிரசாரத்தின் போது தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே