மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 419 வாக்குசாவடி மையங்களில் இன்று இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சி நடைபெறுகிறது.
இதில் உசிலம்பட்டி அருகே எம்.கன்னியம்பட்டியில் 10 பேருக்கு வாக்குசீட்டு இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.
விரைந்து வந்த உசிலம்பட்டி கோட்டாச்சியர் சௌந்தர்யா வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் இதே போல் எழுமலை அருகே அய்யம்பட்டியில் வாக்குசீட்டில் மை கொட்டியதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
மாற்று பேலட் சீட்டுகள் கொண்டு வரப்படும் வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போல் உசிலம்பட்டி அருகே கணவாய்பட்டியில் உசிலம்பட்டியின் சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.