தாய்லாந்தில் இருப்புப் பாதையைக் கடந்த பேருந்து மீது ரயில் மோதி விபத்து – 20 பேர் உயிரிழப்பு..!!

தாய்லாந்து நாட்டில் 60 பயணிகள் சென்ற பேருந்து ஒன்றின் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்தனர்.

தாய்லாந்து நாட்டில் சமுத் பிரகான் மாகாணத்திலிருந்து மத விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று காலை 60 பேர் பேருந்து மூலம் சச்சோயெங்சாவோவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர்.

அப்போது பாங்காக்கிலிருந்து 50 தொலைவில் உள்ள ரயில்வே கிராஸிங் பகுதியில் பேருந்து சென்றபோது அங்கு வந்த சரக்கு ரயில் ஒன்று பேருந்து மீது வேகமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பேருந்து முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது.

இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமுத் பிரகான் மாகாண அரசு தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே