சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல்களுக்கான கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

மேலும், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தமிழக முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் தொடங்கினார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றது.

இந்நிலையில், சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

அப்போது, தேர்தல்களுக்கான கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

மேலும், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தமிழக முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், நாட்டையே அதிரச் செய்த பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்து இரண்டாண்டுகளாகியும் விசாரணைகள் முடிந்த பாடில்லை. குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை எப்படியாவது திணித்துவிட வேண்டும் எனும் பாஜக அரசின் முயற்சிக்கு மக்கள் நீதி மய்யம் கண்டித்துள்ளது.

தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம், கொள்ளையர்களின் கைவரிசை அதிகரித்திருப்பது, கூலிப்படை கொலைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் கண்டித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கான காரணம், அதனைத் தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மர்ம மரணங்கள் குறித்து அலட்சியம் காட்டாமல் உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை பணம் கொடுத்து வாக்குகளைப் பெற திராவிடக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டு வாக்குகளுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் வினியோகம் செய்வதைத் தடுத்து நிறுத்தி நேர்மையான நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏழு தமிழர் விடுதலையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்காமல் ஒருவருக்கொருவர் சுழற்றி விட்டு அரசியல் செய்யாமல் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு வாங்கியுள்ள கடன்களைப் பற்றிய வெள்ளை அறிக்கையை தேர்தலுக்கு முன்னரே மக்கள் மன்றத்தில் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தமிழக முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் மூன்றாவது அணி உதயாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே