கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் நடிகர் சூர்யா..!!

கடந்த 7-ஆம் தேதி ‘கரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்’ என்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த 7-ஆம் தேதி நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்.

வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும் கவனமும் அவசியம்.

அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சூர்யா டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதாக நடிகரும், சூர்யாவின் சகோதரருமான கார்த்தி அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யா சில நாட்கள் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வார் எனவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே