முரசொலி அலுவலகம் இருப்பது பஞ்சமி நிலம் அல்ல என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தில் தோல்வி அடைந்தோர் வெற்றி பெற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அடிப்படையில்லா பழிச்சொல்லுக்கு ஆளாக்கி அவதூறுகளைப் பரப்புவதே ஜனநாயக கடமையாக நினைப்பதாக விமர்சித்துள்ளார்.
அவர்கள் அரசு அதிகாரிகளை முறைகேடாக செலுத்தி மக்களிடையே திமுக மீதும், அதன் தலைவர்கள் மீதும் எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று ஆளாய் பரப்பதாக மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த வழியில் கருணாநிதியின் மூத்த பிள்ளையான முரசொலியின் மீது தொடர்ச்சியான அவதூறை பரப்பி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முரசொலி மீது தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக பழி சுமத்துவதை தாம் மட்டுமல்ல, கட்சியின் எந்த தொண்டரும் ஏற்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
முரசொலி நிலம் குறித்த அபாண்ட பழியை உரிய அதிகாரி படைத்திட்டவர்களிடம் உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி அதன் உண்மை தன்மையை நிரூபிப்பேன் என்று மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.