சிவகங்கை மாவட்டத்தில் தலைகாட்டாத கமல்: மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏமாற்றம்

சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அதன் தலைவர் கமல் பிரச்சாரம் செய்யாததால் அக்கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜ்குமாரும், திருப்பத்தூர் தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் அமலன் சவரிமுத்துவும், சிவகங்கையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஜோசப், மானாமதுரையில் தமிழக ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் சிவசங்கரியும் போட்டியிடுகின்றனர்.

இதில் திருப்பத்தூர் தொகுதியை தவிர்த்து, மற்ற 3 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர். மேலும், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.

மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களின் தலைவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்ட நிலையில், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் இது வரை இம்மாவட்டத்துக்கு வரவி ல்லை.

அவர் மற்ற மாவட்டங்களில் அக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச் சாரம் செய்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தை புறக்கணித்தது அக் கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள் ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தினர் கூறிய தாவது: எங்கள் தலைவர் கமல் காரைக்குடியில் பிரச்சாரம் செய்யத் திட்டமிடப்பட்டு இருந்தது. அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அந்த பயணத்திட்டம் கைவிடப்பட்டது. அவர் வராவிட்டாலும், அவரது ஆதரவோடு பிரச்சாரப் பணிகளை சிறப்பாகச் செய்துள்ளோம். எங்கள் கூட்டணிக்கு மக்கள் மத்தி யில் நல்ல வரவேற்பு உள்ளது,’ என்று கூறினர்.

அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே