அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக கமல்ஹாசன் ட்வீட்!

தோளோடு தோள் நிற்கும் சகோதரருக்கு மரியாதை செலுத்துவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ ஒன்றை தமது டிவிட்டர் பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

அதில், சாதனையாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரமிக்கத்தக்க உரை என குறிப்பிட்டுள்ளார்.

கெஜ்ரிவாலை தலைவராக பின் தொடராதீர்கள் என்றும், அவரை அப்படியே உள்வாங்கி கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இது அறிவுரையல்ல, நமக்கு விடப்பட்டிருக்கும் சவால் எனவும், தாம் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் கமல் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமது ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் கமல் இதனை பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே