தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சர்ச் ரோடு பகுதியில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அடிமைபடுத்த நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும்; தமிழகத்தின் பாரம்பரியம், தனித்தன்மையை பாதுகாக்க வேண்டியது தனது கடமை என்றும் திட்டவட்டமாக கூறினார்.

பின்னர், அகஸ்தீஸ்வரம் சென்ற ராகுல் காந்தி, மறைந்த எம்.பி. வசந்தகுமார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, வசந்தகுமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினரை ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து பிரச்சாரத்திற்கு இடையே இளைப்பாறும் விதமாக அச்சன்குளத்தில் சாலையோர கடையில் ராகுல் காந்தி நொங்கு, சர்பத் அருந்தினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே