குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூர் தேரடி வீதியில் பாரதிய ஜனதா சார்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஹெச். ராஜா, இந்திய குடிமகன் யாருக்கும் இந்த திருத்தசட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார்.

இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே