வாருங்கள் பணியாற்றுவோம் என நடிகர் ரஜினிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்தார்.

ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று உடல்நலம் குறித்து நலம் விசாரித்ததாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியது.

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார்.

அவர் பேசுகையில், தலைவர் என எல்லோராலும் அழைக்கப்படும் நபர் அரசியலை தொடர்ந்து கவனித்து வருகிறார்.

சினிமாவிலும் சரி அரசியலும் சரி எனக்கு பின்னால் வாருங்கள் என்று நான் சொல்லவில்லை. 

வாருங்கள் பணியாற்றுவோம் என்றுதான் அழைக்கிறோம் என்று மறைமுகமாக நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுத்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே