பெட்ரோல், டீசல் விலை உயர்வு..; பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் மூலம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையுயர்வால் எல்லா பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது.

இதனால் மத்திய அரசு எரிபொருள் விலையுயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியாக ரூ.21 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது கொடூரமானது எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படும் நிலையில், நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதனால் சரக்கு வாகனங்களின் வாடகை, அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே