சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர் கமல்ஹாசனை, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த விபத்தின் போது நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் வலது காலில் ஏற்பட்ட முறிவை சரிசெய்வதற்காக டைட்டானியம் கம்பி பொறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி அந்த கம்பியை அகற்றுவதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
மருத்துவமனையில் உள்ள கமல்ஹாசனை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.