வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புதிய அப்டேட்…

பேஸ்புக் நிறுவனம் விரைவில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் விளம்பரம் வெளியிட முடிவு செய்துள்ளது.

2020-ம் ஆண்டில் பல அப்டேட்களை தொடர்ந்து வெளியிடுவோம் என வாட்ஸ்அப் முன்னரே அறிவித்திருந்தது.

தற்போது புதிதாக ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் வெளியிட வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது.

ஸ்டேட்டஸ் அட்ஸ் ( Status Ads ) மூலம் பயனாளர்கள் விளம்பரதாரரின் விவரங்களை அறிய முடியும்.

ஆனால் ஸ்டேட்டஸ் அட்ஸ் ( Status Ads ) வெளியீட்டுத் தேதி இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதுவரையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எவ்வாறு செயல்பட்டதோ அதன் அடிப்படையிலேயே விளம்பரங்களும் வெளியாகும்.

இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் வெளியீட்டு நடைமுறையே வாட்ஸ்அப் தளத்திலும் பயன்படுத்தப்பட உள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப விளம்பரங்கள் வெளியாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே