டிரம்ப் தலை-க்கு 80 மில்லியன் அமெரிக்க டாலர்..!

டிரம்ப் தலையை கொண்டு வந்தால் 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்கப்படும் என்று ஈரான் அறிவித்து இருக்கிறது.

பாக்தாதில் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய அதிரடி ஏவுகணை தாக்குதலில் ஈரான் ராணுவ தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தாக்குதல் சம்பவத்தால் ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் உருவாகி உள்ளது.

அது 3ம் உலக போராக மாறும் என்பதால் வ, வளைகுடா நாடுகளில் பதற்றம் காணப்படுகிறது.

இந் நிலையில், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற காசிம் சுலை மானி இறுதி ஊர்வலமானது அந்நாட்டு அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

அப்போது மூத்த அதிகாரி ஒருவர் பேசிய பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் பேசியதாவது: ஈரானில் இப்போது 80 மில்லியன் மக்கள் உள்ளனர்.

எனவே, அதனை கணக்கில் வைத்து டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 80 மில்லியின் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்கப்படும்.

ஈரானைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் சார்பில் 1 அமெரிக்க டாலர் வழங்கி உதவ வேண்டும்.

நமக்கும் சக்தி இருக்கிறது. அதை சரியான நேரத்தில் பயன்படுத்துவோம் என்று பேசினார். அவரது இந்த பேச்சு அனைத்து நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே