ரூ.80,000 கோடியை ஜம்மு காஷ்மீருக்கு ஒதுக்கிய மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு 80 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு நீக்கியது. பின்னர் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

இதனால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சமாளிக்க மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு, தகவல் தொடர்பு துண்டிப்பு, இணையதள வசதி நிறுத்தம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் 2ஜி இணையசேவைகள் காஷ்மீர் முழுவதும் மீண்டும் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை அம்மாநில வளர்ச்சிக்காக ஒதுக்கி உள்ளது.

இந்த நிதியின் மூலம் மின்சார உற்பத்தி, நீர்பாசனத் திட்டம், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்ற திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே