கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மட்டும் குறைவதே இல்லை என வாகன ஓட்டிகள் பல வருடங்களாக புலம்பி வருகிறார்கள்.

ஆனால், தற்போது வரை அதற்கு ஒரு தீர்வு ஏற்படவில்லை.

இதில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்த பின் கட்டுப்பாடின்றி பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது.

இதில், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதம் மற்றும் பொருளாதார நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறையாமல் இருப்பதும், அதிகரித்துக்கொண்டே செல்வதும் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. 

இதில், டீசலின் விலை பெட்ரோல் விலையை நெருங்கி வந்துவிட்டது அனைவருக்கும் அதிர்ச்சியையே கொடுத்துள்ளது.

பெட்ரோல் விலை 85ஐ நெருங்கு விட்டது. அதேபோல், டீசல் விலை 78ஐ நெருங்கி விட்டது.

இந்நிலையில், நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.04க்கும், டீசர் ரூ.78.48க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலையில் நேற்றை ஒப்பிடும் போது ஒரு லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.84.96க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், டீசல் லிட்டருக்கு ரூ.10 காசுகள் குறைந்து அதே ரூ.78.38 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலை நிர்ணயம் இன்று காலை 6 மணிமுதல் அமுலுக்கு வந்தது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே