இந்தியாவில் ஜியோ 5ஜி சேவை அடுத்த ஆண்டு அறிமுகம்..!!

இந்தியாவில் 5ஜி சேவையில் புதியதொரு புரட்சியை வரும் 2021-ம் ஆண்டின் பிற்பாதியில் படைக்க உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மத்திய தொலைத் தொடர்புத்துறையும், இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கமும் இணைந்து ‘இந்தியா மொபைல் மாநாடு 2020’-ஐ நடத்துகின்றன.

இந்த மாநாடு இன்று (டிச.,8) முதல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி பேசியதாவது: 5ஜி சேவையின் வருகை பெரிய அளவிலான தொழிற்புரட்சியை ஏற்படுத்தும்.

அதன் முன்னோடியாக ஜியோ நிறுவனம் திகழும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்ட உலகளவிலான சிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

5ஜி சேவையை அதிகரிக்கவும், விரைவுபடுத்துவதற்கும் அதை மலிவு மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்வதற்கும் கொள்கை அளவிலான நடவடிக்கைகள் தேவை. 

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி நெட்வொர்க் சேவை உள்நாட்டின் ஹார்டுவேர் மற்றும் தொழில்நுட்ப கூறுகளால் இயக்கப்படும்.

இந்தியாவில் 5ஜி சேவையில் புதியதொரு புரட்சியை வரும் 2021ம் ஆண்டின் பிற்பாதியில் படைக்க உள்ளது. குறிப்பாக, தற்சார்பு இந்தியாவுக்கு இது ஒரு சான்றாக திகழும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே