#அறிவும்அன்பும் : நடிகர் கமல்ஹாசன் உருவாக்கிய கொரோனா பாடல் வெளியானது!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளில் அடைப்பட்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையையும் நல்லெண்ணங்களையும் பரவச்செய்யும் வகையில் நடிகர் கமலஹாசன் பாடல் ஒன்றை இயக்கியுள்ளார்.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

மேலும் பாதிப்பின் தாக்கம் எப்போது குறையும் என மக்கள் தினம் தோறும் ஏங்கித்தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வீடுகளிலிலேயே முடங்கியுள்ள மக்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் அறிவும் அன்பும் என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசன் பாடல் ஒன்றை இயக்கியுள்ளார்.

இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதில் கமலஹாசனுடன் இணைந்து புகழ்பெற்ற பின்னனி பாடகர்களான அனிருத் ரவிச்சந்திரன், யுவன் ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத்,ஷங்கர் மஹாதேவன்,ஸ்ருதி ஹாசன்,பாம்பே ஜெயஸ்ரீ,சித்தார்த்,லிடியன்,ஆண்ட்ரியா,சித் ஸ்ரீராம் அண்ட் முகேன் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த பாடலை திங்க் மியூசிக் THINK MUSIC நிறுவனம் வெளியிடுகிறது.

இதில் முதல் முறையாக ஜூம் செயலியின் மூலமாக ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கமல் ஹாசனும் இசையமைப்பாளர் ஜிப்ரனும் இணைந்து இப்பாடலை வெளியிட்டுவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே