ஜார்க்கண்ட் பேரவை தேர்தல் : வாக்குகள் எண்ணும் பணி..!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர்தாஸ் தலைமையில், பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

81 இடங்களை கொண்டுள்ள இம்மாநில சட்டப்பேரவைக்கு, நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இதில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் மொத்தம், 65.17 சதவீத வாக்குகள் பதிவாகின. இவை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 9 மணியில் இருந்து முன்னணி நிலவரங்கள் வெளிவர தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றி பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே