ஜார்க்கண்ட் பேரவை தேர்தல் 2019 : பாஜக – காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்து வரும் நிலையில், பாஜக – காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் சுமார் 66 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே, பாஜக, காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.

காலை 8.40 நிலவரப்படி பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.

ஜே.வி.எம் 2 இடங்களிலும், ஏ.ஜே.எஸ்.யு 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே