சென்னையில் ஜெயலலிதா நினைவு தின பேரணி – போக்குவரத்தில் மாற்றம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக சார்பாக முதலைமைச்சர் மற்றும் துணை முதலைமைச்சர், அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஊர்வலம் நடைபெற இருக்கிறது.

இதே போன்று அமுமுக மற்றும் பல்வேறுஅமைப்பினரும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதனால் இப்பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நினைவிட கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவடையாத நிலையில் அதற்கான பணிகளும் மூழுவீச்சல் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜெயலலிதா நினைவிடத்தின் வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் போர் நினைவுச்சின்னம் சந்திப்பிலிருந்து கொடிமரச்சாலை, அண்ணாசாலை வழியாக செல்லலாம்.

முத்துசாமி பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் கொடிமரச்சாலைக்கு செல்லாமல், அண்ணாசாலை வழியாக செல்லலாம்.

நேப்பியர் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஆடம்ஸ் பாயிண்டில் திருப்பப்பட்டு, சுவாமி சிவானந்தா சாலை வழியாகச் செல்லலாம்.

தெற்கிலிருந்து வரும் வாகனங்கள் காந்தி சிலையிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக செல்லலாம்.

விவேகானந்தர் இல்லம் சந்திப்பில் வரும் வாகனங்கள் கண்ணகி சிலை சந்திப்பில் திருப்பப்பட்டு, பாரதி சாலை ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக செல்லலாம்.

அண்ணா சாலையில் வரும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலையில் செல்ல அனுமதிக்காமல் நேருக்கு நேராக அண்ணாசாலையில் செல்லலாம்.

இதே போன்று மேலும் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே