சசிகலாவின் தஞ்சை வீட்டை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ்

சசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், புதிய பார்வையின் ஆசிரியர் நடராஜனின் மனைவியுமான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை சென்ற சசிகலா இன்னும் சில மாதங்களில் சிறை தண்டனை முடிவடைந்து வீடு திரும்ப இருக்கிறார்.

இந்நிலையில் தஞ்சாவூர் அருகே மகர் நோன்பு சாவடி பகுதியில் இருக்கும் அவரது வீட்டை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வீடு பழைய கட்டிடம் என்பதால் அதனை தகுதியற்றதாக அறிவித்து அதனை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

ஆனால் இதுவரை இடிக்காததால் வீட்டை விரைவில் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.

அரசியல் பிரபலம் ஒருவரின் வீட்டில் இப்படி நோட்டீஸ் ஒட்டி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே