சென்னை சௌகார்பேட்டையில் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

சென்னை சௌகார்பேட்டையில் ஹோலி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை, தமிழகத்தில் வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சௌகார்பேட்டையில் ஹோலிப் பண்டிகையை, ஏராளமானோர் ஒன்று கூடி ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மேலும் வண்ணம் கலந்த நீரினை பீய்ச்சி அடித்தும், மேளதாளங்களுடன் நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொரானா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக நாட்டின் ஒரு சில இடங்களில் ஹோலி கொண்டாட்டங்கள் இல்லாதபோதிலும் சென்னையில் உற்சாகமாக ஹோலி கொண்டாடப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே