கரூர் கொசுவலை துணி உற்பத்தி ஆலையில் தொடரும் சோதனை

கரூர் ஷோபிகா கொசுவலை நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வெண்ணைமலை பகுதியில் உள்ள ஷோபிகா என்ற நிறுவனத்தில் கடந்த 15ந் தேதி முதல் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

உரிமையாளரின் வீடு, கொசுவலை நிறுவனம் உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது உரிமையாளர் வீட்டில் இருந்து 32 கோடியே 60 லட்சம் ரூபாய் பணமும், 10 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.

மேலும் பல ஆண்டுகளாக போலி ரசீதுகள் மூலம் செலவை அதிகரித்துக் காட்டி வருவாயை மறைத்து, 435 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை முடிவடைந்ததாக கூறப்பட்ட நிலையில் 4வது நாளான இன்று கரூர் தொழிற்பேட்டையில் உள்ள ஷோபிகா கொசுவலை துணி உற்பத்தி ஆலையில் சோதனை நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே