தலித்துகள், முஸ்லிம்களை மனிதர்களாக கருதாதது வெட்கக்கேடு..; ராகுல் காந்தி காட்டம்..!!

வெட்கக்கேடான உண்மை என்னவென்றால் தலித்துகள், முஸ்லிம்களை மனிதர்களாக கருதுவதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண்ணை, 4 இளைஞர்கள் அந்த இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பலத்த காயங்களுடன் இரண்டு வாரங்களாக அந்த இளம்பெண் உயிருக்கு போராடி வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் தங்களது கண்டனங்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்தார்.

இதனால் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ கையில் எடுத்தது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், வெட்கக்கேடான உண்மை என்னவென்றால், பல இந்தியர்கள் தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை மனிதர்களாக கருதுவதில்லை.

முதலமைச்சரும் ,போலீசாரும் ஹத்ராஸ் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

ஏனென்றால் அவர்களுக்கும், மேலும் பல இந்தியர்களுக்கும், பெண் முக்கியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஹத்ராஸ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்ற செய்தியை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே