பிளாஸ்மா தெரபி சிகிச்சையில் பலன் : கெஜ்ரிவால்

டில்லியில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிப்பதற்கு பலன் கிடைத்து வருகிறது என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், கொரோனா நோயாளிகளுகான ‘பிளாஸ்மா தெரபி’ உரிய சிகிச்சை முறை என நிரூபிக்கப்படவில்லை.

சோதனை முறையில் தான் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் டில்லியில் நிருபர்களை சந்தித்த முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:

டில்லியில் உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையை சோதனை முறையில் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி வாங்கியுள்ளோம்.

அதன்படி, சோதனை செய்ததில், மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த நோயாளி குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார். 

ஆரம்ப கட்ட முடிவுகள் சிறந்ததாக உள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் பிளாஸ்மா தெரபி குறித்து மத்திய அரசு தெரிவித்த கருத்துகள் தொடர்பாக சிலர் என்னிடம் தங்களின் கவலைகளை தெரிவித்தனர்.

அனுமதி வாங்கியவர்கள், சோதனை முறையை தொடரலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என்பதை நாங்கள் ஒப்பு கொள்கிறோம்.

ஆரம்ப கட்டத்தில், நேர்மறையான முடிவுகள் வருவதால், இது கொரோனாவுக்கு எதிரான போரில் நமக்கு உதவும்.

பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறையை டில்லி கைவிடுமா என சிலர் என்னிடம் கேட்கின்றனர்.

நிச்சயம் முடியாது.

டில்லியில் கொரோனாவில் இருந்து மீண்ட 1,100 பேர் பிளாஸ்மாவை தானமாக வழங்க முன்வந்துள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே