தமிழக போலீசாரால் தேடப்பட்டு வந்த 3 தீவிரவாதிகள் டெல்லியில் கைது

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கருதப்படும், 3 பேரை டெல்லியில் சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். 

பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வரும் ஐஎஸ் அமைப்பை கட்டுப்படுத்த, உலக நாடுகள் பலவும் திணறி வருகின்றன.

இந்தியாவில் வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்ட உள்ளதை முன்னிட்டு டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் 3 பேரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீன் மற்றும் அப்துல் சமத் என்பதும், கன்னியாகுமரியை சேர்ந்த சைய்யது அலி நவாஸ் என்பதும் தெரியவந்தது. 

இதில் இருவர் இந்து முன்னணி தலைவர் கே.பி.சுரேஷ்குமார் கொலை வழக்கில் ஜாமின் பொற்றவர்கள் எனக் கூறப்படுகிறது.

டெல்லி வந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திவிட்டு, நேபாளம் வழியாக பாகிஸ்தான் செல்ல அவர்கள் மூவரும் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே